மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

தடுப்பூசி இருப்பு: பிரதமர் ஆய்வு!

தடுப்பூசி இருப்பு:  பிரதமர் ஆய்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி இயக்கங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று (ஜூன் 4) பிரதமர் மோடி தடுப்பூசிகள் இருப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

காணொலி மூலமாக நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில், இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை பிரதமர் ஆய்வு செய்தார்

தற்போதைய தடுப்பூசி மருந்துகளின் இருப்பு குறித்தும், அதை அதிகரிக்க செய்வதற்கான திட்டம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்காக தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது.

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 18-44 வயது பிரிவினருக்கான தடுப்பூசி வழங்கல் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். பல மாநிலங்களில் தடுப்பு மருந்து வீணாதல் குறித்து ஆய்வு செய்த பிரதமர், அதிகளவில் தடுப்பு மருந்து வீணாவதாகவும், அதை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தடுப்பூசி இருப்பு குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவதாகவும், இந்த தகவல்களை மாவட்டங்களுக்கு அனுப்பி மக்களுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ளும் படி மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா , நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் இதர முக்கிய அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 5 ஜுன் 2021