மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

கோவின் இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ்மொழி

கோவின் இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ்மொழி

கோவின் இணையதளத்தில் அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்காக கோவின் என்ற இணையதளம் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் 18-44 வயதுடையவர்கள் தடுப்பூசி போடுவதற்கு கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி கோவின் இணையதளத்தில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஆங்கிலமும், இந்தியும் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடா மற்றும் ஒரியா உள்ளிட்ட 9 மாநிலங்களின் மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

”கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் ஆங்கிலமும்,இந்தியும் இருந்த நிலையில் 9 மொழிகள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாதது வருத்தமளிக்கிறது.

கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால் ஆங்கிலம் தெரியாதவர்களால் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் உடனடியாக தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து புதிதாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

மேலும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் உடனடியாக தலையிட்டு தமிழ்வழியில் ‘கோவின்’ இணைய வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன்படி இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் வலியுறுத்தினார். அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 5 ஜுன் 2021