மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

இன்று 22,651 பேருக்கு கொரோனா!

இன்று 22,651 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று (ஜூன் 4) ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,95,402 ஆக அதிகரித்துள்ளது.இன்று பாதிக்கப்பட்டவர்களில் 12,513 பேர் ஆண்கள், 10,138 பேர் பெண்கள் ஆவர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 33,646 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 19,00,306 பேர் குணமடைந்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் 190 பேர், அரசு மருத்துவமனைகளில் 273 பேர் என 463 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 1,75,033 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,68,968 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 1971 பேரும்,செங்கல்பட்டில் 909 பேரும், கோவையில் 2810 பேரும், ஈரோட்டில் 1619 பேரும், சேலத்தில் 1187 பேரும், திருப்பூரில் 1161 பேரும், கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 38 பேரும், சென்னையில் 71 பேரும், கோவையில் 31 பேரும், சேலத்தில் 20 பேரும், வேலூரில் 12 பேரும் திருப்பூரில் 16 பேரும் கொரோனாவால் பலியாகினர்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 4 ஜுன் 2021