மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க குழு!

கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க குழு!

கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 460 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்கவும், பாதிப்பு குறைந்த பகுதிகளில் தளர்வுகளை அறிவிக்கலாம் எனவும் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும், ஊரடங்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெரியும்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளும், அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், அரசு அலுவலர்கள் இல்லாத மருத்துவர்கள் குகானந்தம், குழந்தைசாமி,மனோஜ் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய நான்கு பேரும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட 9 பேரும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழு கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தும். மேலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து, பாதிப்பு நிலவரங்கள் குறித்து கண்காணித்து, அரசுக்கு தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் இக்குழு வழங்கும். தேவைப்படும் பட்சத்தில் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பூர்ணலிங்கம் ஐஏஎஸ்

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளராகவும் மின்வாரிய தலைவராகவும், ஜவுளித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர்தான் பூர்ணலிங்கம் ஐஏஎஸ். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது TNMSC எனப்படும் தமிழ்நாடு மருந்து பொருள் சேவை கழகம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு மருந்து பொருள் சேவை கழகத்தின் தலைவராக பூர்ணலிங்கம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இதற்குபிறகுதான் அந்த அமைப்பின் செயல்பாடுகளும், பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. மருந்துகளை வாங்குதல், தரம் பார்த்தல், விநியோகம் செய்தல், விண்ணப்பம் செய்யும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தல், மருந்து பதுக்கலை கட்டுப்படுத்துதல், மருந்து வீணாவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை பின்பற்றும் அளவில் மாற்றங்களை புகுத்தினார். இப்படிப்பட்ட சாதனைகளை செய்தவர்தான் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வெள்ளி 4 ஜுன் 2021