மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

பிளஸ் 2 தேர்வு நடத்த ஆதரவு!

பிளஸ் 2 தேர்வு  நடத்த ஆதரவு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வை ரத்து செய்து வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோரிடம் கருத்துக் கேட்டு, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தலாமா, ரத்து செய்யலாமா என்பது குறித்து கருத்துக் கேட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக இன்று (ஜூன் 4) மாலை, கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்பினர் ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனிடையே, மாணவர்களின் உயர்கல்வியையும், வேலைவாய்ப்பையும் கருத்தில்கொண்டு தேர்வு நடத்த வேண்டும். ஆன்லைன் வாயிலாக நடத்தலாம். மூன்று மணி நேரத் தேர்வை ஒன்றரை மணியாகக் குறைத்து அதற்கேற்ற வகையில் வினாத்தாள்களைத் தயார் செய்து தேர்வு நடத்தலாம். தேர்வு மையங்களை அதிகரித்துத் தேர்வு நடத்தலாம் எனப் பல கல்வியாளர்களும் பெற்றோர்களும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு 60 சதவிகிதம் பேர் பொதுத் தேர்வை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் தற்போது கிராமப்புறங்களிலும் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருவதால், மாணவர்களின் உடல்நலனே முக்கியம் என்று கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் சில பெற்றோர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 4 ஜுன் 2021