மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி!

திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி!

கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் ரூ.2,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மறைந்த கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளான நேற்று தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, திருநங்கைகளும், மாற்றுத்திறனாளிகளும் மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருநங்கைகளுக்கும் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி தொகையாக 4,000 ரூபாய் வழங்க முடிவு செய்து முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதில் குடும்ப அட்டை வைத்திருந்த 2,956 திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டது.

குடும்ப அட்டை இல்லாத தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என திருநங்கைகள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விடுபட்ட திருநங்கைகளுக்கும் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து ஏற்கனவே குடும்ப அட்டை உள்ள திருநங்கைகள் 2,956 பேருக்கு நிதி வழங்கியது போக எஞ்சிய 8,493 திருநங்கைகளுக்கும் நிதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8,493 திருநங்கைகளுக்கு தலா 2,000 ரூபாய் வழங்க 1 கோடியே 69 லட்சத்து 86,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

வெள்ளி 4 ஜுன் 2021