மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

தமிழகம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு அப்டேட்!

தமிழகம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு அப்டேட்!

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து நாளை மறுநாள் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசனை நடத்தி மாநில வாரியாக நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்து வருகின்றன

ராஜஸ்தான், கோவா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பிளஸ் 2 பொது  தேர்வை ரத்து செய்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்யமிக் சிக்ஷா பரிஷத் என்பது நாட்டின் மிகப்பெரிய கல்வி வாரியம் ஆகும். நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த கல்வி வாரியம் முதன்முறையாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்  தேர்வுகளை ரத்து செய்துள்ளது என்று அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா இன்று தெரிவித்தார். அதுபோன்று மகாராஷ்டிரா அரசும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

அசாம், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.

அது போன்று தமிழகத்திலும் தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் வாட்ஸ்அப் எண்கள் மூலம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கருத்துக்களைப் பெற்று வருகின்றன.

இன்று (ஜூன் 3) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  “அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் நாளை மாலை 4 மணி அளவிலும், அதன்பிறகு கல்வியாளர்கள் பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் ஆகியோருடன் மாலை 5 மணி அளவிலும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படும்.

அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் காலை அனைத்து தரப்பினரின் கருத்துகளும் முதலமைச்சர்  கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பான முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 3 ஜுன் 2021