மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

மாஜி அமைச்சரைக் கைது செய்ய இடைக்காலத் தடை!

மாஜி அமைச்சரைக் கைது செய்ய இடைக்காலத்  தடை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, பெண்களின் அனுமதியின்றி கருச்சிதைவு உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நடிகை சாந்தினி என் மீது பொய்யான புகாரை அளித்துள்ளார். நான் அவரிடம் கொடுத்த 5 லட்சத்தை திருப்பி கேட்டது முதல் என்னை பிளாக்மெயில் செய்ய தொடங்கினார். அவரை நான் ஏமாற்றவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை ஏதுமின்றி அவசர அவசரமாக எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் இதை எதிர்த்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அதில் பணம் பறிப்பதற்காகவே புகார் கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கூறும் குற்றச்சாட்டுப் பொய் என்றும் திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதால்தான் சேர்ந்து வாழ சம்மதித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனைக் கைது செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது

அதாவது, நடிகை சாந்தினி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வராததால் வழக்கை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அதற்குள் நடிகையின் ஆட்சேபனை மனுவைப் பட்டியலிடவும் உத்தரவிட்ட நீதிமன்றம் அதுவரை மணிகண்டனைக் கைது செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 3 ஜுன் 2021