மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

தேவேந்திர குல வேளாளர் அரசாணை : திமுகவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தேவேந்திர குல வேளாளர் அரசாணை : திமுகவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு ஜூன் 1 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

பட்டியல் பிரிவில் உள்ள குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர், பள்ளர், தேவேந்திரகுலத்தார், வாதிரியார் என்ற 7 பிரிவினரையும் ஒன்றிணைத்து ஒரே சமூகமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இக்கோரிக்கையை மாநில அரசு ஏற்று ஆணை பிறப்பித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதுகுறித்தான சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டத் திருத்தமானது அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன்படி பள்ளர், தேவேந்திரகுலத்தார், காலாடி, பண்ணாடி, குடும்பர், கடையர் ஆகிய ஆறு சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ் வழங்கிட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், துறைத் தலைவர்கள், அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஆகியோர் நடைமுறையைப் பின்பற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு தேவேந்திர குல வேளாளர் சமூக பிரமுகர்களிடம் இருந்து வரவேற்பு வந்திருக்கும் நிலையில்... இந்த பொதுப்பெயர் அளிக்கக் கூடாது என்று எதிர்த்துக் கொண்டிருக்கும் வெள்ளாளர் சமூக அமைப்புகள் தங்களது கடுமையான எதிர்வினையை வெளியிட்டிருக்கின்றனர்.

வேளாளர் (வெள்ளாளர்) மையம் என்ற அமைப்பின் சார்பில் அக்னி சுப்பிரமணியம் வெளியிட்ட செய்தியில்.

"தி.மு.க ஆட்சிக்கு வந்தால், வேளாளர் பெயரை மீட்போம். நம் பெயரை கொடுக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர் என்பதாக தி.மு.க-விற்கு முட்டு கொடுத்த வேளாளர் சொந்தங்கள் கூறி வந்தன.

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து, ஒரு மாதம் கூட ஆகவில்லை, வேளாளர் பெயரை தாழ்த்தப்பட்ட 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்த எந்த தடையுமில்லை, என்பதோடு, இனி அரசு எல்லா இடங்களிலும், இந்த 7 உட்பிரிவை சார்ந்தோருக்கு வழங்கப்பட உள்ள அனைத்து சாதி சான்றிதழ்களிலும், இவர்கள் "தேவேந்திர குல வேளாளர்கள்" என குறித்து கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த செய்தி வேளாளர்கள் இதயத்தை கிழித்து கூறு போட்டுள்ளது.

தி.மு.க, மத்திய அரசை காட்டி எந்தவொரு சப்பைக்கட்டு கட்டினாலும், துரோகத்தனத்தை வேளாளர்களுக்கு காட்டியது நிரூபனமாகியுள்ளது.

ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள 7 சிறைவாசிகளை, இந்திய உச்ச நீதி மன்றமே, தமிழக அரசு நினைத்தால், இந்திய அரசியலமைப்பு பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்யலாம் என சொன்னாலும், இதுவரை அவர்களின் விடுதலையை தள்ளி போட அனைத்து வித யுத்திகளையும் கையாளும், தமிழக அரசு....

நமது வேளாளர் பெயர் பிரச்சனையில், ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தமிழக ஆளுநரின் உத்தரவை பெற்று, கடந்த 1ம் தேதியே அரசணையை பிறப்பித்து கொண்டு, இது பற்றி இதுவரை வாயை திறக்காமல் இருந்து வந்ததை பார்க்கும்போது, துரோகத்தனத்தை செய்தால், எப்படி வெளியே சொல்ல இயலும் என்ற மன நிலையோடு இருப்பதைத்தான் காட்டியுள்ளது.

1.5 லட்சம் ஈழத்தமிழர்களை மரணத்திற்கு வழி வகுத்த அன்றைய தி.மு.க, உலகத் தமிழர்களின் மனத்திலிருந்து இப்போது வரை தூக்கி எறியப்பட்டுள்ளதை நினைவு கூற வேண்டும்.

அதேபோல, இன்று வேளாளர்களின் உணர்வுகளை மதிக்காமல், வரலாற்றை சரியாகக் கூட தெரிந்து கொள்ளாமல் / படிக்காமல், வெள்ளாளர்களின் நெஞ்சை கிழித்து தொங்க விட்டுள்ளது. இனி எந்த காலத்திலும் 2 கோடி வேளாளர்களின் மனதில் தி.மு.க - வின் துரோகம் அழியாத வடுவாக இருக்கும். இந்த வடுவை இனி எப்போது சரி செய்ய இயலாது.

வேளாளர்கள் இனி எவரையும் நம்பி பயனில்லை. இருக்கும் ஒரே வழி, நீதி மன்றம் தான்"என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன், ,வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

வியாழன் 3 ஜுன் 2021