மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

வாழ்த்துகள் ஸ்டாலின் என சொல்வீர்களா? முதல்வர் உருக்கம்!

வாழ்த்துகள் ஸ்டாலின் என சொல்வீர்களா?  முதல்வர் உருக்கம்!

திமுக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்து மறைந்த கலைஞரின் 98 ஆவது பிறந்த நாள் திமுகவினராலும் மாநில உரிமைகளை வலியுறுத்தும் பல்வேறு கட்சியினராலும் அமைப்புகளாலும் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா நினைவிடத்துக்கு சென்று வணங்கிவிட்டு அதன் பின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுடன் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு, கனிமொழி எம்பி. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலைஞருக்கு மரியாதை செலுத்தினர்.

கலைஞர் மறைவுக்குப் பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரும் கலைஞரின் முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுதும் புதிய திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று கலைஞர் நினைவிடத்துக்கு செல்வதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில்,

"கழகத்தின் கண்மணிகளுக்கு தனித்தனி பிறந்த நாள் இல்லை. எல்லாருக்கும் பிறந்தநாள் ஜூன் 3 தான். இந்த ஜூன் 3 நான் உங்களிடம் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலை நிமிர்ந்து வருகிறேன். ஈரோட்டில் நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றிவிட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வருகிறேன். நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாகத்தான் எப்போதும் நினைப்பேன். இப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருப்பீர்கள். கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை விரட்ட உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் பெறும் வகையில் செயல்பட்டுவருகிறேன். என்னுள் இருந்து நீங்கள் செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களது வார்ப்பான நான் இந்த ஜூன் 3 உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே?"என்று உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 3 ஜுன் 2021