மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

சிபிஎஸ்இ தேர்வு ரத்து : மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

சிபிஎஸ்இ தேர்வு ரத்து : மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: ஆனால் எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்பதை ஏன் அறிவிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என்றும், இதுகுறித்து கொள்கைரீதியிலான முடிவை 3 நாட்களில் எடுக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் மே 31ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜூன் 1ஆம் தேதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு தொடர்கிறது. இதுபோன்ற சூழலில், மாணவர்களின் ஆரோக்கியம் பற்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலைப்படுவது இயற்கையானதுதான். இதுபோன்ற அழுத்தமான சூழ்நிலையில், தேர்வுகள் எழுத மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. அதனால்,சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு இந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ தேர்வு தொடர்பான வழக்கு இன்று(ஜூன் 3) உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்கப்படும் என்றும், மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் 2 வாரத்தில் முடிவெடுத்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க நான்கு வாரங்கள் வேண்டும் என இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வாரியம் தெரிவித்தது.

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த செயல்முறை தாமதத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர விரும்புவதால் நான்கு வாரங்கள் என்பது நீண்ட காலமாகும். அது மாணவர்களை பாதிக்கும். அதனால், மதிப்பெண் வழங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 3 ஜுன் 2021