மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

இன்று 25,317 பேருக்கு கொரோனா !

இன்று 25,317 பேருக்கு கொரோனா !

தமிழகத்தில் இன்று(ஜூன் 2) ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 21,48,346 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில்14,088 பேர் ஆண்கள், 11,229 பேர் பெண்கள்.

தனியார் மருத்துவமனைகளில் 204 பேர், அரசு மருத்துவமனைகளில் 279 பேர் என இன்று மட்டும் 483 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எவ்வித இணை நோயும் இல்லாத 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 25,205 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 32,263 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 18,34,439 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 1,74,329 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போதுவரை, 2,88,702 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 2217 பேரும்,செங்கல்பட்டில் 996 பேரும், கோவையில் 3061 பேரும், ஈரோட்டில் 1488 பேரும், சேலத்தில் 1290 பேரும், திருப்பூரில் 1252 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 34 பேரும், சென்னையில் 77 பேரும், கோவையில் 38 பேரும், ஈரோட்டில் 25 பேரும், ராணிபேட்டையில் 24 பேரும், வேலூரில் 29 பேரும் கொரோனாவால் பலியாகினர்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 2 ஜுன் 2021