மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்கள்!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்கள்!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய பிரதேஷ், குஜராத் ஆகிய மாநிலங்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து பிரதமர் அறிவித்தார். மாணவர்களின் உடல் நலனில் எந்த சமரசமும் கிடையாது என்றும் கூறினார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களும், அந்தந்த மாநிலத்தால் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டன.

குஜராத்

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஜூலை 1 முதல் 16ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும், மற்றொரு பகுதி பிற்பகல் 2.30 முதல் 5.45 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பூபேந்திரசிங் சுதாசமா அறிவித்தார்.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அவர் கூறுகையில், மாணவர்களின் வாழ்க்கை விலை மதிப்பற்றது. கொரோனா பரவும் இதுபோன்ற சூழலில் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது நியாயமில்லை. தேர்வுகள் இல்லாமல் மதிப்பெண்களைக் கணக்கிட்டு முடிவுகளை வெளியிட நிபுணர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களில் மாணவர்களுக்குத் திருப்தி இல்லை என்றால், பின்னர் அந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு இந்த தேர்வு நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு

தமிழகத்தில் பிள்ஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா என்பது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தேர்வு நடத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் கருத்து கேட்க முதல்வர் அறிவுறுத்தினார். அடுத்த இரண்டு நாட்களுக்குள் கருத்துக் கேட்டு, முடிவை எடுக்கும் பணியில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.

நாளை முதல் ஆன்லைன் வாயிலாகக் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகளைக் கேட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

14417 என்கிற உதவி எண் அல்லது [email protected] என்கிற இமெயில் முகவரியிலும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 2 ஜுன் 2021