மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

வழக்கு விசாரணையில் சினிமா பாடல்கள்: அதிர்ந்த நீதிபதி

வழக்கு விசாரணையில் சினிமா பாடல்கள்: அதிர்ந்த நீதிபதி

கொரோனா கால ஊரடங்கால் நீதிமன்ற சேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றங்கள் காணொலி முறையில் வழக்குகளை விசாரிக்கின்றன. ஆனால் காணொலி விசாரணையில் என்னவெல்லாம் நடக்கக் கூடுமென்பதற்கு, இன்று( ஜூன் 2) நடந்த ஒரு சம்பவமே சாட்சியாக இருக்கிறது.

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் அமல்படுத்தப்படுவதை எதிர்த்து பாலிவுட் நடிமை ஜூகி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை காணொலி முறையில் இன்று நடந்துகொண்டிருந்தது. நீதிபதி மிதா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, யாரோ ஒருவர் வெப் எக்ஸ் இயங்குதளத்தின் மூலம் காணொலி விசாரணை நீதிமன்ற அறைக்குள் நுழைந்து ‘மேரி பன்னோ கி ஆயேகி பராத்’ போன்ற ஜூஹி சாவ்லா நடித்த ஹிட் பாடல்களை பாடினார். அதுமட்டுமல்ல, நீதிமன்ற அறையில் மனிஷா கொய்ராலா, ஜான்வி போன்ற பெயர்களில் சிலர் தோன்ற ஆரம்பித்தனர். அந்த நபர் மூன்று முறை ஜூஹி சாவ்லாவின் பாடல்களைப் பாட நீதிபதி மிதா அதிர்ச்சி அடைந்தார்.

“அந்த நபர் யார் என்று அடையாளம் காணுங்கள். அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியும்”என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும் போது, ​​பங்கேற்பாளர்கள் அவரது வாதங்களுக்கு எதிராக ஈமோஜிகளைப் பயன்படுத்தினர். இது காமெடியானது. ஒரு கட்டத்தில், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் 200 ஐத் தாண்டியது. விசாரணையில் ஜூஹி சாவ்லாவும் கலந்து கொண்டார்.

ஆனால் நடிகைகளின் பெயர்களில் நுழைந்த பயனர்கள் தங்களது இணைப்பை ஆஃப் செய்ய அனுமதிக்காததால், அந்த காணொலி நீதிமன்ற அறை நீதிமன்ற ஊழியர்களால் லாக் செய்யப்பட்டது. அதன் பிறகே விசாரணை நடந்தது.

விசாரணையில், “இந்த வழக்கு ஊடக விளம்பரத்துக்காக தொடுக்கப்பட்டுள்ளது”என்று கண்டித்தது நீதிமன்றம். தீர்ப்பை ஒத்திவைத்தது.

வழக்கு விவரம் ஒருபக்கம் இருந்தாலும் காணொலி முறையில் நடக்கும் நீதிமன்ற விசாரணைகளின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு விசாரணை உதாரணமாக அமைந்திருக்கிறது.

எனவே இணையத்தில் நடக்கும் காணொலி வழக்கு விசாரணைகளில் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தவும், பங்கேற்பாளர்களின் முழு விவரங்களை நீதிமன்றம் பெறவும் தேவை ஏற்பட்டுள்ளது, இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 2 ஜுன் 2021