மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

பிரிட்டனில் கொரோனா மூன்றாம் அலை!

பிரிட்டனில் கொரோனா மூன்றாம் அலை!

பிரிட்டனில் கொரோனா மூன்றாம் அலையின் ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்படுவதாக அந்நாட்டு அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா முதல் அலையால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. அப்போது ஒருசில நாடுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இரண்டாம் அலையிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால் பிரிட்டன், பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இரண்டாம் அலையால் மிகவும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவை கொரோனா இரண்டாம் அலை புரட்டிப் போட்டது. தற்போது, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா மீண்டு வருகிறது.

ஜூலை மாதத்தின் இறுதியிலோ, ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்திலோ மூன்றாம் அலை தொடங்கலாம்; மூன்றாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், குறிப்பாகக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். கொரோனாவின் அடுத்த அலையைக் கணிக்க முடியாது, ஆனால் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனில் மூன்றாம் அலை உருவாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டன் அரசின் ஆலோசகரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பேராசிரியருமான ரவி குப்தா கூறுகையில், “பிரிட்டனில் ஊரடங்கு மூலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்பை காட்டிலும் கொரோனா பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 வேரியன்ட் பிரிட்டனில் வேகமாகப் பரவ தொடங்கியிருக்கிறது.

பிரிட்டனில் கொரோனா மூன்றாம் அலையின் தொடக்க நிலை உருவாகியிருக்கலாம். குறைந்தது நான்கில் மூன்று பங்கு தொற்றுகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட மாறுபட்ட வைரஸாகும்.

கொரோனா பாதிப்பு ஓப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. எந்தவொரு அலையாக இருந்தாலும், ஆரம்பத்தில் குறைவான பாதிப்பில் தொடங்கி, பின்பு கும்பல் கும்பலாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். முதல் மற்றும் இரண்டாம் அலையில் இதுதான் நடந்தது. எனவே, தற்போது மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.

பிரிட்டனில் அதிகமானோர் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டிருப்பதால், இந்த அலையானது முந்தைய அலைகளைப் போல பரவுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். எனவே, கட்டுப்பாடுகளை ஜூன் 21ஆம் தேதி தளா்த்துவதை மேலும் சில வாரங்களுக்குத் தாமதப்படுத்த வேண்டும். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் கவுன்சில் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால், கூறுகையில், “பிரிட்டனில் கட்டுப்பாடுகளை ஜூன் 21ஆம் தேதி தளா்த்துவது குறித்து அரசு யோசிக்க வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். மிகப் பெரிய பாதிப்பைச் சந்திக்கக் கூடிய நிலை ஏற்படும். இதனால், ஏற்கனவே உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து போய் இருக்கிற மருத்துவப் பணியாளர்களின் தேவையும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசின் சுற்றுச்சூழல் துறை செயலா் ஜார்ஜ் யூஸ்டிஸ், “கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவது தாமதமாவதை அரசால் நிராகரிக்க முடியாது. கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து ஜூன் 14ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 2 ஜுன் 2021