மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

கொரோனா பாதிப்பு குறைகிறது, உயிரிழப்பு அதிகரிக்கிறது!

கொரோனா பாதிப்பு குறைகிறது, உயிரிழப்பு அதிகரிக்கிறது!

தமிழகத்தில் இன்று(ஜூன் 1) ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 21,23,029 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில்14,783 பேர் ஆண்கள், 11,730 பெண்கள் ஆவர்.

தனியார் மருத்துவமனையில் 198 பேர், அரசு மருத்துவமனையில் 292 பேர் என இன்று மட்டும் 490 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31,673 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 18,02,176 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,67,397 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2,96,131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டில் 1106 பேரும், கோவையில் 3332 பேரும், சென்னையில் 2467 பேரும், ஈரோட்டில் 1653 பேரும், சேலத்தில் 1140 பேரும், திருப்பூரில் 1338 பேரும், திருச்சியில் 987 பேரும், தஞ்சையில் 895 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 1 ஜுன் 2021