மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று 12 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில்,

நில சீர்திருத்த முதன்மை செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜு, டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் 1-ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்ட   ஆணையர்  மதுமதி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் மீன்வளத் துறை கூடுதல் ஆணையராகவும்,

சேலம் ஆட்சியராக இருந்த ராமன்  தோட்டக்கலைத் துறை மற்றும் தேயிலைத் தோட்டத்துறை இயக்குநராகவும்,

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரசேகர் சகாமுரி மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணைச் செயலராகவும்,

மதுரை ஆட்சியராக இருந்த அன்பழகன், அரசு சர்க்கரை ஆலை கூடுதல் ஆணையராகவும்,

தர்மபுரி ஆட்சியராக இருந்த கார்த்திகா, உயர் கல்வித்துறை இணைச் செயலராகவும்,

சமக்ர சிக்‌ஷா  கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட அமிர்த ஜோதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைச் செயலாளராகவும்,

இந்திய அரசின், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சக இணைச் செயலாளராக  இருக்கும் ஆஷிஸ் சட்டர்ஜி, டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-2 ஆகவும்

தமிழ்நாடு கடல் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவராக இருக்கும் கிறிஸ்து ராஜ் பொது மற்றும் மறுவாழ்வு மையத் துணைச் செயலராகவும்

 தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்த சந்திரகாந்த் பி காம்ப்ளே, புதிய திருப்பூர் நகர வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராகவும்

தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குநர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட சுதா தேவி தமிழ்நாடு நீர்நிலை மேலாண்மைத் துறை நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 1 ஜுன் 2021