மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவு : அமைச்சர்!

சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவு : அமைச்சர்!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை பொறுத்தே, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, இன்று(ஜூன் 1) காலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,” சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும். சிபிஎஸ் இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் தேர்வு தேதிகள் வெளியான பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும் .

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி கல்வி கட்டணம் மட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் வரும் புகார்கள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தக்கம் வினியோகம் செய்வது தொடர்பாக ஓரிரு தினங்களில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

கட்டண நிர்ணயக் குழு

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2008ஆம் ஆண்டு கட்டண நிர்ணயக் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். 2020 - 2023 வரையிலான ஆண்டுகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் நேரடியாக இந்தக் குழுவிடம் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது விசாரணை செய்யப்பட்டு பள்ளியில் தவறு செய்து இருந்தால் கட்டணம் திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த குழுதான் தற்போது பள்ளிகளிலிருந்து வரும் மற்ற புகார்களையும் விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 1 ஜுன் 2021