மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

தடை போட்ட டாக்டர்கள்- மீறிய முதல்வர்!

தடை போட்ட டாக்டர்கள்- மீறிய முதல்வர்!

திமுக ஆட்சி அமைந்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று 25வது நாள் இன்று (ஜூன் 1) தொடங்குகிறது. இந்த 24 நாட்களின் முதல்வர் பணி எதிர்க்கட்சிகளாலும் வியக்கும்படிதான் இருக்கிறது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகளே.

முதல்வரின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி கோட்டை முக்கிய அதிகாரிகள் சிலரிடத்தில் விசாரித்தோம்.

“தினந்தோறும் இரவு உறங்க 12 மணியைக் கடந்தாலும், காலையில் 5.00 மணிக்கு எழுந்து மூச்சு பயிற்சி, லேசான உடற்பயிற்சி, இரவு நடந்த நிகழ்ச்சிகளை அறிந்துகொள்வது, தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைத் தொடர்புகொள்வது என்று பரபரப்பாகவே இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் மிக ஈடுபாட்டோடு இருக்கிறார். முதல்வர் உடல்நிலையை அறிந்த குடும்ப மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் சில அன்பான தடைகளைப் போடுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறிக்கொண்டுதான் இருக்கிறார் முதல்வர்.

உதாரணமாகச் சமீபத்தில் கோவை சென்ற முதல்வர் அங்கே கொரோனா வார்டுக்கு நேரடியாக பாதுகாப்பு உடையணிந்து சென்று நோயாளிகளோடு பேசினார். இதைப் பற்றி அறிந்த முதல்வரின் மருத்துவர்கள் அதைத் தவிர்க்கச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘நேரடியாகச் சென்று பார்த்தால்தான் மக்கள் கஷ்டங்கள் தெரியும், மருத்துவர்களும் செவிலியர்களும் ஆர்வமாக பணிசெய்வார்கள். நான் பிபி கிட் அணிந்துகொண்டு கொரோனா வார்டுக்கு செல்லும்போது மருத்துவத்துறையினருக்கு உற்சாகமாக இருக்கும். நம்பிக்கையளிப்பதாக இருக்கும்.

பிபி கிட் போட்டுப் பார்த்ததால்தான் இதைவிட இன்னும் தரமான கிட் கிடைக்குமா என்று அதிகாரிகளைக் கேட்டுள்ளேன். நான் அந்த கிட் பயன்படுத்தவில்லை என்றால் அதன் தரத்தைப் பற்றியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி எனக்கு எப்படித் தெரியும்’ ஆலோசனைகள் கூறும் மருத்துவர்களிடமே, ‘எனக்குத் தொற்று ஏற்பட்டால் நீங்கள் என்னை காப்பற்றுவீர்கள்’ என்று அவர்களுக்கே நம்பிக்கை வார்த்தைகள் பேசி சிரித்திருக்கிறார்.

அப்படியும் விடாத மருத்துவர்கள் முதல்வர் ஸ்டாலின் மனைவியிடம் தகவல்கள் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து முதல்வரின் இல்லத்திலும், ‘மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்களேன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் வரையில் சரி சரி என்று கேட்டுக்கொண்ட முதல்வர் கோவை சென்றதும் கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டும் என்று கேட்டு உள்ளே சென்று நோயாளிகளிடம் உடல் நலன் விசாரித்துள்ளார்”என்கிறார்கள்.

-வணங்காமுடி

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

செவ்வாய் 1 ஜுன் 2021