மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

ஆக்சிஜன் அளவை பொறுத்தே சிகிச்சை!

ஆக்சிஜன் அளவை பொறுத்தே சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பாதித்த நோயாளிகளை மூன்று வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 15,766 ஆண்கள், 12,170 பெண்கள் என மொத்தம் 27,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரேநாளில் 478 பேர் உயிரிழந்தனர். பாதிப்பு குறைந்திருந்தாலும், உயிரிழப்போர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சுகாதாரத் துறை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனா நோயாளிகளை மூன்று வகையாக பிரித்து சிகிச்சையை தொடர வேண்டும்.

கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போரை மருத்துவமனையில் அனுமதிக்காமல், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டு தனிமையில் இருப்போர் ஜிங்க் மற்றும் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் இருந்தால் பாரசிட்டமல் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். 6 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 90 -94க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறலாம்.

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் குறைந்துள்ள நோயாளிகளை ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும்.

தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து வகையான கொரோனா நோயாளிகளுக்கும் சாதாரண அறையில் ஆக்சிஜன் அளவு 92 ஆக இருந்தால் மட்டுமே குணமடைந்ததாக கருதப்படுவார்கள். இதே ஆக்சிஜன் அளவு மூன்று நாட்களுக்கு நீடித்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், மூச்சு பயிற்சியை தினமும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

செவ்வாய் 1 ஜுன் 2021