மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

பருப்பு டெண்டர்: தனி நீதிபதி உத்தரவு ரத்து!

பருப்பு டெண்டர்: தனி நீதிபதி உத்தரவு ரத்து!

பருப்பு பாமாயில் டெண்டருக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் , ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பு பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் டெண்டர் அறிவிப்பில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை மே 26ஆம் தேதி விசாரித்த நீதிபதி வேலுமணி, 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு, 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக தங்குதடையின்றி வழங்க வேண்டியுள்ளது. எனவே இந்த டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதுபோன்று இந்த டெண்டர் அறிவிப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோர் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விருப்பமில்லை, வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, பருப்பு, பாமாயில் கொள்முதலுக்குத் தடை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

செவ்வாய் 1 ஜுன் 2021