மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

அர்ச்சகர்களுக்கு ரூ.4000 உதவித் தொகை: அமைச்சர் சேகர்பாபு

அர்ச்சகர்களுக்கு ரூ.4000 உதவித் தொகை: அமைச்சர் சேகர்பாபு

கொரோனா நோய் தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இங்கு பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்கள், ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 31) அறிவித்தார்.

அந்த அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோயில்களில் 34 ஆயிரம் கோயில்களின் வருமானம் ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்குக் கீழ் மட்டுமே உள்ளது.

இந்தக் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை. கொரோனா காரணமாகக் கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் போதிய வருமானம் இன்றி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் , பூசாரிகள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. பக்தர்கள் வருகை இன்றி மாத சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், கோயில் ஊழியர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

எனவே, கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் 4000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார்.

இந்த உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் திருக்கோயில் பணியாளர் அல்லாத திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

இதன் வாயிலாக மொத்தம் சுமார் 14 ஆயிரம் கோயில் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள். இந்தத் திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதியன்று தொடங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

திங்கள் 31 மே 2021