மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விருது!

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விருது!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விருது அறிவித்து உலக சுகாதார அமைப்பு கௌரவித்துள்ளது.

ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி (இன்று), உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இ சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 2019 செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, இந்தியாவில் இ சிகரெட் உற்பத்தி, இறக்குமதி/ ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை விநியோகம் ,சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இ சிகரெட்டை ஒழிக்கவும் ,சூடுபடுத்தப்பட்ட புகையிலை பொருட்களை ஒழிக்கவும் சட்டமியற்றியதற்கு, அங்கீகாரம் வழங்கும் விதத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு சிறப்பு அங்கீகார விருதை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேபிரியாசிஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2019ஆம் ஆண்டு இ சிகரெட் மற்றும் சூடுபடுத்தப்பட்ட புகையிலையை ஒழிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் தலைமையிலான குழு எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. இதனால் அவருக்குச் சிறப்பு இயக்குநர் ஜெனரல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷ்வர்தன், “புகையிலை பயன்பாட்டை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக 2009இல் புகையிலைப் பயன்பாடு 34.6 சதவீதமாக இருந்தது. இது 6 சதவீதம் குறைந்து 2016 -17ல் 28.6 சதவீதமாக உள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான புகையிலை ஒழிப்பு தினத்தில், ‘புகையிலையைக் கைவிட உறுதி எடுப்போம்’ என்ற முழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகையிலை கட்டுப்பாடு ஆய்வுக் குழுவுக்கு உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகமும் அங்கீகாரம் கொடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அதுபோன்று தனக்கு விருது அறிவித்ததற்கு, உலக சுகாதார அமைப்பின் இயக்குநருக்கு ஹர்ஷ்வர்தன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 31 மே 2021