மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் நடவடிக்கை!

குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் நடவடிக்கை!

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

குழந்தைகள் உரிமை அமைப்பான சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (CRY) சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40சதவிகிதம் அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது.குறிப்பாக தர்மபுரி,சேலம், திண்டுக்கல், திருவாரூர் மாவட்டங்களில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்ததையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மே 31) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் 1098 அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், அதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், குழந்தை திருமணம் தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும் சமூக நலத் துறையும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரை வழங்கப்பட்டது.

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் மற்றும் திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 31 மே 2021