மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

ஒரு மனிதன் ஒரு வைரஸ்:  மோடி மீது ராகுல் காட்டம்!

ஒரு மனிதன் ஒரு வைரஸ்:  மோடி மீது ராகுல் காட்டம்!

கொரோனா தடுப்பூசி  விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித கொள்கையும், செயல் திட்டமும் இல்லாமல் திணறுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் பேரிடராகப் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நாடு முழுதும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் திட்டங்களை ஒத்தி வைத்துள்ளன. தமிழகத்தில் கூட தடுப்பூசி போடும் பணி சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று (மே 31) தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 “ மோடி அரசாங்கத்துக்கு தடுப்பூசி செலுத்துதல் பற்றிய எந்த கொள்கையும் இல்லாதால் பாரத் மாதாவின் நெஞ்சில்  வாளைச் செருகி வருகிறார். இதுதான்  வேதனையான உண்மை”என்று குறிப்பிட்டுள்ள ராகுல் இன்னொரு ட்விட்டில்,

  “ஒரு மனிதர், அவரது ஆணவம் + ஒரு வைரஸ் அதன் உருமாறிய தன்மை”என்று பிரதமர் மோடியையும்  கொரோனா வைரசையும் குறிப்பிட்டு,

 “97  சதவீத இந்தியர்கள் கொரோனா பரவலுக்குப் பின் ஏழ்மையில் இருக்கிறார்கள். தொடர் ஊரடங்கு முடக்கத்தால் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இந்த மே மாதத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது”என்றும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 31 மே 2021