மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

தடுப்பூசியைப் பெற்றுத் தருவது பாஜகவின் கடமை: மா. சுப்பிரமணியன்

தடுப்பூசியைப் பெற்றுத் தருவது பாஜகவின் கடமை: மா. சுப்பிரமணியன்

தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற்றுத் தருவது பாஜகவின் கடமை என்று சுகாதாரத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

இன்று காலை சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு மளிகைப்பொருட்கள் வீடுகளுக்கே சென்று வாகனங்களின் மூலம் விநியோகிக்கும் திட்டத்தைப் பட்டாளம் பகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இன்று முதல் நடமாடும் மளிகைக் கடைகள் செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் நடமாடும் மளிகைக் கடைகள் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றார்.

தடுப்பூசி குறித்துப் பேசிய அவர்,  தமிழகத்துக்கு இதுவரை 83 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசிடமிருந்து வந்துள்ளன. அதேபோல் தமிழக அரசு சார்பில் கொள்முதல் செய்வதற்காக  கட்டியுள்ள பணம் ரூ. 85 கோடியே 48 லட்சம். இதன் மூலம் வரவேண்டியது 25 லட்சம் தடுப்பூசிகள். 18-44 வயதினருக்காக 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதிலேயே இன்னும் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டி உள்ளது. மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை வந்துள்ளன. இதில் 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  கையிருப்பில் 5 லட்சம் உள்ளது.

முதல் அலையிலேயே 3 சதவிகித அளவுக்குத் தடுப்பூசி வீணடிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்தது. இதில் முறையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எங்கிருந்து வருகிறது.

பாஜக தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டுகளை வைப்பதைக் காட்டிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான்  மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.   மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி பெற்றுத் தரும் பணியை அவர் விரைந்து செய்ய வேண்டும்   தமிழகத்திற்குக் கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்றுத் தருவது பாஜகவின் கடமை.

7.5 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு 16.4 சதவிகிதமும், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு 6.4 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி வந்திருக்கிறது. இந்த பாரபட்சமின்றி தடுப்பூசியைப் பெற்றுத் தர வேண்டும்” என்றார்.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

திங்கள் 31 மே 2021