மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

நிவாரண நிதியின் 2வது தவணை எப்போது?

நிவாரண நிதியின் 2வது தவணை எப்போது?

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வழங்கல் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று(மே 31) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000க்கான டோக்கன் கடந்த 15 ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு, ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

நிவாரண நிதியின் இரண்டாவது தவணை ஜூன் 3ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு,தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்குவது, ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியது , ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 31 மே 2021