மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு: மத்திய அரசு பரிசீலனை!

செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு: மத்திய அரசு பரிசீலனை!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மக்களை பாடாய் படுத்தி வருகிறது. மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சூழலில், 'கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றிக் கொள்ள ஒரே தீர்வு தடுப்பூசிதான். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் மருத்துவமனைகளிலும், தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் நிற்பதைக் காணமுடிகிறது. அதேசமயத்தில் ஒரு சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாட்டால், ஊசி போட வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு எச்.எல்.எல் தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசுக்குக் குத்தகைக்கு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மூலம், தமிழகத்திலேயே தடுப்பூசியை உற்பத்தி செய்து மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே விசிக எம்.பி. ரவிக்குமாரும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், செங்கல்பட்டில் உள்ள எச்எல்எல் பயோடெக் லிமிடெட் என்ற தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் ரவிக்குமார் எம்.பியின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , “செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது பற்றி பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 31 மே 2021