மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

ஆ.ராசாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

ஆ.ராசாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசாவுக்கு அவரது மனைவி மறைவு குறித்து இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி நேற்று முன் தினம் (மே 29) காலமான நிலையில் மே 30ஆம் தேதி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ராகுல் காந்தி.

அதில். “தங்களது மனைவி திருமதி பரமேஸ்வரி அவர்கள் குறைந்த வயதில் மரணம் அடைந்ததை அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். நீங்கள் மிகவும் நேசித்த அவரது இழப்பு உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் துன்பத்தை உணர்கிறேன்.

உங்கள் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடியான துயரமான நேரங்களில் உங்களுக்கு அவர் உற்றதுணையாக இருந்து வழங்கிய உறுதியான ஆதரவு இப்போது இந்த வலியைக் கடக்க உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

தங்களது மனைவியாரின் அன்பான குணமும், ஈகை குணமும் அவரை அறிந்த அதிருஷ்டம் பெற்றவர்களால் என்றென்றைக்கும் நினைவு கூரப்படும்.

அப்படிப்பட்டவரை இழந்து நிற்கும் உங்கள் வேதனையை என்னால் உணரமுடிகிறது. இந்த நேரத்தில் தங்களுக்கு என் இதயமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும் என் பிரார்த்தனைகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 31 மே 2021