மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

மாஜி அமைச்சர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மாஜி அமைச்சர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கட்டாய கருச்சிதைவு உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இவர் கடந்த மே 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.

அதில், ”கடந்த 5 ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டார். ரவுடிகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். என்னை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டுகிறார். மூன்று முறை கட்டாய கருச்சிதைவு செய்ய வற்புறுத்தினார்” என்று குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான வாட்ஸ் அப் சாட் மற்றும் வீடியோ ஆதாரங்களைச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி சமர்ப்பித்தார்.

இந்தப் புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது, சட்டப்பிரிவு 313- பெண்களின் அனுமதியின்றி கருச்சிதைவு, 323- அடித்து காயம் ஏற்படுத்துவது, 417- மோசடி, 376- பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், 67(எ) - தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று மணிகண்டன் உதவியாளர் பரணி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கையாக மணிகண்டனைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 31 மே 2021