மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

கொரோனா நோயாளிகளை சந்தித்தது ஏன்?: முதல்வர்!

கொரோனா நோயாளிகளை சந்தித்தது ஏன்?: முதல்வர்!

கோவையில் கொரோனா வார்டில், நோயாளிகளை நேரில் சந்தித்து முதல்வர் நலம் விசாரித்தது பாராட்டை பெற்று வருகிறது. இதனால் ட்விட்டரில் #WeStandWithStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலையின் எதிரொலியாகக் கடந்த மே 20, 21 ஆகிய தேதிகளில் திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கோவைதான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

இதனால் இரண்டாவது முறையாக இன்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் ஆய்வு செய்தார். முன்னதாக, அவரது கோவை வருகையையொட்டி ட்விட்டரில் #gobackstalin என்ற ஹேஹ்டேக் ட்ரெண்டானது. தேசிய அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது. பாஜகவினர் பலரும் GoBackStalin ஹேஷ்டேக்கில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்தனர்.

இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர், அங்கு 50 கார் ஆம்புலன்சை தொடங்கி வைத்து மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

பின்னர், கொரோனா வார்டுக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். கொரோனா வார்டுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வருக்கு அறிவுத்தப்பட்ட போதிலும், முன்களப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில், தொற்றாளர்களை நேரில் சந்தித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பிபிஇ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.

வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா வார்டுக்குள் நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதோடு தற்போது #WeStandWithStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 30 மே 2021