மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

ஆவின் விலை குறைப்பால் ரூ. 270கோடி இழப்பு: அமைச்சர் நாசர்

ஆவின் விலை குறைப்பால் ரூ. 270கோடி இழப்பு: அமைச்சர்  நாசர்

ஆவின் பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகப் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

இன்று (மே 30) காலை 5மணி முதல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்களில் பால் விநியோகம், விற்பனை விலை குறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன்

முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபால மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதால் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.270 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்த இழப்பினை ஈடுகட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பால்பொருள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் 39 லட்சம் லிட்டராகத் தமிழகத்தில் உயர்ந்துள்ளது. பால் விலை குறைந்த பின், 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. பால் விலையை உயர்த்தி விற்றதற்காக 13 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையைக் காட்டிலும் ஆவின் மூலம் விற்கப்படும் கால்நடை தீவனம் விலை குறைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பால் விநியோகத்தை அதிகரிக்கக் கூடுதலாக 365 விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடமாடும் பால் விற்பனை மையம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பால் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்கள் கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் ஆவின் தயாரிப்புகளை அதிகப்படுத்தி ஏற்றுமதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 30 மே 2021