மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 30) ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையை பின்னுக்குத் தள்ளி, தற்போது கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. நேற்று சென்னையில், 2705 பேரும் கோவையில் 3692 பேரும் பாதிக்கப்பட்டனர். அதுபோன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் அதிகமாக உள்ளது.

கோவையில் 38824 பேரும், சென்னையில் 38680 பேரும் சிகிச்சையில் உள்ளனர் என தமிழக சுகாதாரத் துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. ஈரோட்டில் நேற்று 1743 பேர் பாதிக்கப்பட்டு, மொத்தம் 14400 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதுபோன்று திருப்பூரில் நேற்று 1697 பேர் பாதிக்கப்பட்டு, மொத்தம் 17628 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்த அவர், காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தூய்மை பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு 10 ஆயிரம் மூட்டை அரிசி வழங்கினார்.

இன்று காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவக் கல்லூரிக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட அவர், படுக்கை வசதி குறித்தும், ஆக்சிஜன் இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து 5 மருத்துவர்கள் , 5 செவிலியர்களுக்கு புதியதாகப் பணி நியமன ஆணை வழங்கினார்.

ஈரோடு ஆய்வைத் தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முதல்வர், 20 கார் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த இரு மாவட்டங்களைத் தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வந்த அவர், கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா தொற்றாளர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 30 மே 2021