மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

கண்ணீருடன் அண்ணியை வழியனுப்பிய மக்கள்!

கண்ணீருடன் அண்ணியை வழியனுப்பிய மக்கள்!

திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி நேற்று (மே 29) மாலை 7.10 மணிக்கு சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் காலமானார். பரமேஸ்வரியின் உடல் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து பெரம்பலூருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து இன்று காலை ராசாவின் சொந்த கிராமமான பெரம்பலூரை அடுத்த வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டு, எவ்வித சடங்குகளும் இன்றி பரமேஸ்வரியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் அறிந்து நேற்று இரவு முதலே திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் ராசாவின் இல்லத்துக்கு சென்று பரமேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தி ராசாவுக்கு ஆறுதல் கூறினார்கள். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டமிட்டப்படி கோவை சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் ராசாவின் வீட்டுக்கு சென்று மறைந்த பரமேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தினார்.

டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஜெகத்ரட்சகன், பொன்முடி, மதுரை மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஏராளமான திமுக தொண்டர்கள் பரமேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மலை சூழ்ந்த கிராமமான வேலூரில் ராசா குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்திலேயே பரமேஸ்வரியின் நல்லடக்கம் நடந்தது. கொரோனா காலம் என்பதால் கூடிய திமுக தொண்டர்களை கட்டுப்படுத்துதல், சமூக இடைவெளியை ஏற்படுத்துதல் என்று இறுதி நிகழ்ச்சிகளை மாவட்ட அமைச்சரான எஸ்.எஸ்.சிவசங்கர் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். பலரும் ராசாவை தேற்ற முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். எவ்விதச் சடங்குகளும் செய்யாமல் தோட்டத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த நல்லடக்கம் நடைபெற்றது.

“அண்ணன் (ராசா) வீட்டுக்கு மக்கள் பல கோரிக்கைகளோட மனு எடுத்துக்கிட்டு போவாங்க. அவர் இல்லைன்னா அண்ணிதான் மனுவை வாங்கிட்டு விசாரிப்பாங்க. எங்கேர்ந்து வர்றீங்க. என்ன பிரச்சினைனு கேட்பாங்க. எல்லாருக்கும் சாப்பாடு போட்டு அனுப்புவாங்க. ரொம்ப ஏழையா இருந்தா தன்னோட சேமிப்புலேர்ந்து பணமும் கொடுத்து பத்திரமா போயிட்டு வாங்கனு அனுப்புவாங்க. இப்படி எல்லாருக்கும் உதவி செஞ்ச அண்ணி இன்னிக்கு இப்படி போயிட்டாங்களே” என்று திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கதறி அழுதது உருக்கும் வகையில் இருந்தது.

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

ஞாயிறு 30 மே 2021