மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

சிறையில் சோக்ஸி: ஆன்டிகுவா அரசியலிலும் புயல்!

சிறையில் சோக்ஸி: ஆன்டிகுவா  அரசியலிலும் புயல்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தப்பியோடி, தற்போது டொமினிகா நாட்டு சிறையில் இருக்கும் மெகுல் சோக்ஸியின் தற்போதைய புகைப்படத்தை ஆன்டிகுவா நியூஸ் ரூம் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வைர வியாபாரியும் வங்கி மோசடியாளருமான மெகுல் சோக்ஸி கடந்த வாரம் ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகா சென்று அங்கிருந்து க்யூபா தப்பிக்க முயன்றதாக முதல் கட்டத் தகவல்கள் வந்தன. ஆனால் அதன் பின் சோக்ஸியின் வழக்கறிஞர்கள், “சோக்ஸி ஆன்டிகுவாவில் இருந்து கடத்தப்பட்டிருக்கிறார். அவரை கடத்தியதில் இந்திய, ஆன்டிகுவா புலனாய்வுத் துறை போலீஸுக்கு பங்கிருக்கிறது. அவர்களால் சோக்ஸி தாக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை டொமினிகாவை விட்டு தற்போது வெளியேற்றக் கூடாது” என்று டொமினிகா நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து டொமினிகா நீதிமன்றமும் தற்போதைக்கு அவரை டொமினிகாவை விட்டு வெளியேற்ற தடை விதித்துள்ளது.

இந்தப் பின்னணியில்தான் டொமினிகா நாட்டின் போலீஸாரின் கஸ்டடியில் இருக்கும் சோக்ஸியின் புகைப்படத்தை ஆன்டிகுவா நியூஸ் ரூம் என்ற செய்தி நிறுவனம் இந்திய நேரப்படி இன்று (மே 30) வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆன்டிகுவா நாட்டிலும் சோக்ஸி விவகாரம் பெரிய அளவிலான அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. பிரதமர் ப்ரவுனுக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கட்சிக்கும் இடையே அறிக்கைப் போர்கள் நடந்து வருகின்றன.

எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கட்சி இந்த விவகாரத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

“ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய செயல்முறைக்கு உரிமை உண்டு, சட்டத்தின் ஆட்சி அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். பிரதமர் ஸ்டன் பிரவுன் நிர்வாகம்தான் சோக்ஸிக்கு குடியுரிமை வழங்கியது. இந்திய குடியுரிமைச் சட்டத்தின் 9 வது பிரிவின் கீழ், ஒரு முறை இந்திய குடிமகன் மற்றொரு நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொண்டால், அவரது இந்திய குடியுரிமை தானாகவே ரத்து செய்யப்படுகிறது. அன்படி சோக்ஸி ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் குடிமகன் - இந்தியாவின் குடிமகன் அல்ல.

சோக்ஸி கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படுவது ஏற்கனவே நாட்டைப் பற்றிய ஒரு தெளிவற்ற சித்திரத்தை உலக அரங்கில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் பிரவுன் வேண்டுமென்றே சட்டத்தின் ஆட்சியைத் தகர்த்து ஊழல் செய்ய முயற்சிப்பது நிலைமையை மோசமாக்குகிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுன்,

“இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வைத்திருக்கும் மெஹுல் சோக்சியை அடைத்து வைத்திருப்பதாக எனது நிர்வாகத்தை குறை கூறி வரும் ஐக்கிய முற்போக்குக் கட்சியினர், இப்போது திடீரென சோக்ஸிக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். சோக்ஸியை இப்போது புனிதப்படுத்தி வருகின்றனர்.சோக்ஸியிடம் இருந்து பெருமளவு நிதிபெறும் முயற்சியில்தான் இப்படி செய்கிறது ஐக்கிய முற்போக்குக் கட்சி.

சோக்ஸியின் குடியுரிமையை ரத்து செய்வதற்கும், அவர் தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்”என்று கூறியுள்ளார்.

தொழிலதிபர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்கள் சார்பாக பணம்தான் பேசும் என்பது ஆன்டிகுவா நாட்டிலும் நடந்து வருகிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 30 மே 2021