மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

நிச்சயம் வந்து கட்சியை சரிபண்ணிடலாம்: சசிகலா பேசிய பின்னணி!

நிச்சயம் வந்து கட்சியை சரிபண்ணிடலாம்:  சசிகலா பேசிய பின்னணி!

சீக்கிரம் அரசியலுக்கு மீண்டும் வந்து கட்சியை சரிபண்ணி விடுவேன் என்று அதிமுக தொண்டர் ஒருவருக்கு சசிகலா தொலைபேசியில் அளித்த உத்தரவாதம் தமிழகம் முழுதும் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

நேற்று (மே 29) வாட்ஸ்அப்பில் லாரன்ஸ் என்ற அதிமுக தொண்டரே இந்த ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்.

லாரன்ஸுக்கு சசிகலாவின் பி.ஏ. கார்த்திக் போன் போட்டு, ’ந்தோ ஒரு நிமிசம் இருங்க அம்மா பேசுறாங்க கொடுக்குறேன்...' என்று சசிகலாவிடம் போனை கொடுக்கிறார்.

அப்போது சசிகலா... ’லாரன்ஸ் நல்லாருக்கீங்களா?' என்று பெயரைச் சொல்லி விசாரிக்கும்போதே எதிர்முனையில் லாரன்ஸ் உற்சாகத்தில் உடைந்துவிடுகிறார்,

‘அம்மா நல்லா இருக்குறம்மா... உலகத்துல இத விட பெரிய விசயமே இல்லம்மா... எல்லாரும் நல்லா இருக்கம்மா...உங்க பின்னாடிதாம்மா எல்லாரும் நிக்கிறோம்' என்று தழுதழுக்க...

’சீக்கிரம் வந்துடுவேன் ஒண்ணும் கவலைப்படாதீங்க. கட்சியெல்லாம் சரி பண்ணிடலாம்... ஜாக்கிரதையா இருங்க. நிலைமை வெளிய மோசமா இருக்குப்பா...'

‘ரொம்ப நன்றிம்மா... பொறந்த பொறப்புக்கு இன்னிக்குதாம்மா விடிவு காலம்...’

‘சரிப்பா சரிப்பா.. நிச்சயம் வந்துடுவேம்ப்பா.. வணக்கம்’ என்று முடிகிறது அந்த உரையாடல்.

இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது,

“லாரன்ஸ் ஒரு அதிமுக தொண்டர். சசிகலா சிறையில் இருக்கும்போது பல கடிதங்களை அவருக்கு எழுதியவர். இவரைப் போல ஏராளமான தொண்டர்கள் சசிகலாவுக்கு சிறையில் கடிதங்களை எழுத அவர்களுக்கு சசிகலா பதில் கடிதங்களும் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடனும் தொடர்பிலேயே இருக்கிறார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பேசிய உரையாடல் இது. கொரோனா பெருந்தொற்று குறையத் தொடங்கியதும் சசிகலா தன்னை சந்திக்க பலருக்கும் அப்பாயின்ட்மென்ட் கொடுக்க இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக பலருடனும் இப்போது அலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையில் கட்சியின் அடிநிலை நிர்வாகிகள், தொண்டர்கள், குறிப்பாக சிறையில் இருந்தபோது தனக்கு கடிதம் எழுதியவர்களை தற்போது சசிகலாவே தொடர்புகொண்டு பேசிவருகிறார். அந்த வகையில்தான் இந்த உரையாடலும் அமைந்திருக்கிறது. விரைவில் நிலைமாறும்” என்கிறார்கள்.

தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒவ்வொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி எடப்பாடி இப்படி; பன்னீர் அப்படி: அதிமுக எப்படி? என்ற தலைப்பில் நேற்று (மே 29) பகலில் செய்தியாக்கியிருந்தோம். நேற்று இரவே சசிகலா -அதிமுக தொண்டருடன் பேசும் ஆடியோ வெளியாகி அதற்குப் பதில் சொல்லும் விதமாய் அமைந்திருக்கிறது.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 30 மே 2021