மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

மாஜி அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரணை!

மாஜி அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரணை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நடிகை சாந்தினி தேவா, நேற்று முன்தினம் (மே 28) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார். இருவரும் ஐந்து ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். இதனால், மூன்று முறை கர்ப்பம் தரித்து, பின்பு கட்டாயத்தினால் கரு கலைப்பு செய்தேன். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதுடன், தனது அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டி வருகிறார் என்று புகார் அளித்திருந்தார்.

இந்த புகாருக்கு விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சாந்தினி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. தனக்கும், அந்த நடிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பணம் பறிக்கும் நோக்கத்துடன் என் மீது புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் சுதன் தன்னிடம் 3 கோடி ரூபாய் வரை பேரம் பேசினார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தன் மீது அவதூறு கருத்து தெரிவித்ததற்கு வழக்கறிஞர் சுதன் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பணம் பறிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாகக் கூறிய அவதூறு கருத்துக்கு, மணிகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் மான நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், சாந்தினி அளித்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றம் செய்துள்ளதாகவும், இதுகுறித்து துணை ஆணையர் ஜெயலட்சுமி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக சட்ட வல்லுநர்களுடன் தனிப்படையினர் ஆலோசனையைத் தொடங்கியுள்ளனர். இதற்கடுத்து, நடிகை சாந்தினிக்கும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் சம்மன் அனுப்பி விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 30 மே 2021