மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

பெற்றோரை இழந்த குழந்தைகள்: பிரதமர், முதல்வர் புதுதிட்டம்!

பெற்றோரை இழந்த குழந்தைகள்: பிரதமர், முதல்வர் புதுதிட்டம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் அதிகமானோர் பலியாகினர். தந்தை, தாய்,கணவர்,மனைவி, அக்கா, தங்கை, தம்பி என உறவுகளை இழந்து மக்கள் தவிக்கின்றனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையில் 577 குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி பல மாநிலங்கள், அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளன. ஆந்திராவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.

அதையடுத்து, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ஒரே தவணையில் ரூ.3 லட்சம் வழங்கப்படும். குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.2000 வழங்கப்படும். குழந்தைகளின் கல்லூரி படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று கேரள அரசு தெரிவித்தது. இந்த வரிசையில், தற்போது தமிழக அரசும் இணைந்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நோய் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு பிரிவு, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் முதல்வர் கீழ்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.

கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும்

வரையில் வழங்கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியையும், மாவட்டந்தோறும் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, கூடுதல் தலைமைச்செயலாளர், நிதித்துறை அவர்களது தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறைச்செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 23 வயதை அடைந்ததும் ரூ.10 லட்சம் அளிக்கப்படும். அதுபோன்று கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்படும் எனவும் இதற்கான வட்டி பிஎம் கேர்ஸ் மூலம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 29 மே 2021