மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி!

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி!

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுபடுத்தும் நோக்கில், மே 24ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஊரடங்கில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய எட்டு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இ-பதிவு பெற்ற நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

சனி 29 மே 2021