மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

ஊரடங்கு முடியும்வரை மூன்றுவேளை உணவு!

ஊரடங்கு முடியும்வரை மூன்றுவேளை உணவு!

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு முடியும்வரை சிறப்பு உணவளிக்கும் திட்டம் மூலம் தேவைப்படும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பசியால் வாடும் மக்களுக்கு, பலரும் முன்வந்து உதவி செய்து வருகின்றனர். தனி நபராகவும், குழுவாகவும் இணைந்து தங்கள் பகுதியிலுள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியால் வாடாத நிலையை உருவாக்குவோம் என திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, கரூர் ஓபிஜி பவர் ஜெனரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.50 லட்சம், வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை, சிவா டெக்ஸ்டைல்ஸ் தலா ரூ.7.5 லட்சம், பொறியாளர் சந்திரசேகரன் ரூ.1 லட்சம் என ரூ.66 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மே 29) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கரூர் மாவட்டத்தில், ஊரடங்கு காலத்தில் முதியவர்கள், ஆதரவற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு உணவளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உணவு தேவைப்படுபவர்களுக்கு மூன்று வேளையும் வழங்கப்படும். உணவு தேவைப்படுபவர்கள் 94987 47644, 94987 47699 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மறுநாள் காலை உணவு தேவை என்பவர்கள் முதல் நாள் இரவு 8 மணிக்குள்ளும், மதிய உணவு தேவை என்பவர்கள் அன்றைய தினம் காலை 8 மணிக்குள்ளும், இரவு உணவு தேவை என்பவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மூன்று வேளையும் உணவு தேவை என்பவர்கள், ஒவ்வொரு முறையும் கால் பண்ண தேவையில்லை. முதல் அழைப்பிலே அதனை தெரிவிக்க வேண்டும். சிறப்பு உணவளிக்கும் திட்டம் நாளை முதல் ஊரடங்கு முடியும்வரை செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

சனி 29 மே 2021