மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

குறைந்து வரும் கொரோனா!

குறைந்து வரும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. தொற்று அதிகரிப்பால், படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக மக்கள் அவதிப்பட்டும், பலர் உயிரிழந்தும் வந்தனர். கொரோனாவால் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்ததால், உடல்களை எரிக்க இடமில்லாமல், ஒரே இடத்தில் உடல்களை தகனம் செய்வது, 24 மணி நேரமும் உடல்கள் எரிக்கப்படுவது, உடல்களை ஆற்றில் வீசுவது உள்ளிட்ட கண்கொண்டு பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்தன. தற்போது இந்த நிலை மாறியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள், தங்களின் வசதிகேற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டன. அதன் விளைவாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,73,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,77,29,247 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 3,617 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 3,660 ஆக இருந்தது. இதுவரை 3,22,512 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து 2,84,601 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2,51,78,011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 22,28,724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி கொரோனா பாதிப்பில் 31,079 பேருடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தப்படியாக கர்நாடகாவில் 22,823 பேரும், கேரளாவில் 22,318 பேரும், மகாராஷ்டிராவில் 20,740 பேரும், ஆந்திராவில் 14,1429 பேரும் மேற்கு வங்கத்தில் 12,193 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரி உயிரிழப்பில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், அதற்கடுத்தபடியாக தமிழகமும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 1,022 பேரும், தமிழகத்தில் 486 பேரும் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து 50 சதவிகித பாதிப்புகள் பதிவாகின்றன.

கடந்த20 நாட்களாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 24 மாநிலங்களில் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

45 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை விட, கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 8.36 சதவிகிதமாகவும், வார கொரோனா பாதிப்பு 9.84 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவிகிதம் 90.80 சதவிகிதமாக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

சனி 29 மே 2021