மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

ஒருவர் கூட பசியால் வாடாத நிலையை உருவாக்குவோம்!

ஒருவர் கூட பசியால் வாடாத நிலையை உருவாக்குவோம்!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு ஒரளவு குறைந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் இன்னும் பாதிப்பை குறைக்கவும், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் பாதிப்பை குறைக்கவும் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மே 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு வார ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. மேலும் பாதிப்பு குறைந்திடவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு நாளை(மே 30) கோவைக்கு நேரடி பயணம் மேற்கொள்கிறேன்.

அவசர கால பயணம் என்பதால் கழக நிர்வாகிகள் யாரும் நேரில் வரவேற்பதற்கும், சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம்.

உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்பாட்டின் அடிப்படையில் பசியைப் போக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கின்ற நிலையை உருவாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 29 மே 2021