மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

மறைந்தார் கல்வி ஆளுமை அனந்தகிருஷ்ணன்

மறைந்தார் கல்வி ஆளுமை அனந்தகிருஷ்ணன்

அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் இன்று (மே 29) சென்னையில் காலமானார். சென்னையில் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில் சிறந்த கல்வி அடையாளமாக திகழ்ந்தவர் அனந்த கிருஷ்ணன். தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த அனந்த கிருஷ்ணன், கான்பூர் ஐஐடி யின் தலைவராக மூன்று முறை ஆனந்த கிருஷ்ணன் இருந்துள்ளார். தமிழக அரசின் சார்பில் தமிழக பள்ளிகளுக்கான புதிய பாடத் திட்ட குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளர் இழந்திருப்பது கல்வியுலகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு . கலைஞர் ஆட்சியில் பிஇ சேர்க்கையில் ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தவர். இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப்படுத்த ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்க உதவியவர். உள் கட்டமைப்பை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் பஉகழை உலகெங்கும் பரப்பியவர் அனந்தகிருஷ்ணன்” என்று தெரிவித்துள்ளார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்ட செய்தியில்,

“முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மிகச் சிறந்த கல்வி ஆளுமையாகத் திகழ்ந்த அவர் தேசியக் கல்விக் கொள்கை 2020 முன் வைக்கும் ஆபத்தான நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். இவர் தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவின் வலுவான பரிந்துரையின் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழ் நாடு அரசு சட்டம் இயற்றியது. கல்வித் தளத்தில் மிகப் பெரும் சவால்களை மக்கள் சந்திக்க வேண்டிய சூழலில் அனந்தகிருஷ்ணனின் மறைவு மிகப் பெரிய இழப்பாகும்”என்று குறிப்பிட்டுள்ளனர்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 29 மே 2021