மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

டெல்லியில் ஸ்டாலின் பவர் முகம்: சபரீசன் புது வியூகம்!

டெல்லியில் ஸ்டாலின் பவர் முகம்: சபரீசன் புது வியூகம்!

தமிழகத்தில் இருந்து விரைவில் ராஜ்யசபாவுக்கு செல்லப் போவது யார் யார் என்பது குறித்து திமுகவில் போட்டி தொடங்கிவிட்டது.

இதுகுறித்து திமுக ராஜ்யசபா ரேஸ்: முதல் ரவுண்டில் யார் யார்? என்ற தலைப்பில் ஒரு செய்தியை மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். அதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன், தங்க தமிழ்ச்செல்வன், கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோருக்கு திமுக சார்பில் ராஜ்ய சபா கிடைக்க முதல் ரவுண்டில் வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருந்தோம்.

இந்த விஷயத்தில் திமுகவுக்குள் அடுத்தடுத்த கட்ட டெவலப்மென்ட்டுகள் நடந்து வருகின்றன. ராஜ்யசபா சீட்டுக்காக திமுகவில் பலரும் போராடிக்கொண்டிருக்க, சபரீசன் தரப்பில் ராஜ்யசபா பற்றி வேறு ஒரு அபிப்ராயம் ஓடிக் கொண்டிருக்கிறது.

“ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து கனிமொழி எம்பியாக இருக்கிறார், தயாநிதிமாறன் எம்பியாக இருக்கிறார், உதயநிதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில் மாப்பிள்ளை சபரீசனும் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்படுவது திமுக மீதான நேரடியான விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்க்கும். இது ஒரு பக்கம் என்றாலும் ராஜ்யசபா உறுப்பினர் என்ற பதவியை வைத்துக்கொண்டு தமிழகத்துக்காக பெரிதாக எதுவும் சாதித்துவிட முடியாது என்றும் சபரீசன் வட்டத்தில் கருதுகிறார்கள்.

அதனால்... தமிழகத்தில் இருக்கும் அமைச்சர் அந்தஸ்தோடு டெல்லியில் இருந்தால், தமிழ்நாட்டுக்காக இன்னும் வீரியமாக செயல்பட முடியும் என்றும், இந்த அடிப்படையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக செல்லலாமா என்ற யோசனை சபரீசன் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு ராஜ்யசபா எம்பியோ, லோக் சபா எம்பியோ திடீரென மத்திய அமைச்சர்களையோ, பிரதமரையோ சந்தித்துவிட முடியாது. ஒரு எம்பியாக இருந்து அவர்களிடம் நேரம் கேட்பதை விட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அடிப்படையில் நேரம் கேட்டால் உடனடியாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கான திட்டங்கள், ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடுகள், தமிழகத்தின் பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று தீர்வு காண முடியும். எனவே தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்பிக்களில் ஒருவராக இருப்பதை விட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக செயல்படலாமா என்ற ஆலோசனை சபரீசனைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ராஜ்யசபா உறுப்பினருக்கு ஒரு வருடத்தில் 34 முறை விமானத்தில் இலவசமாக டெல்லி சென்று வர அனுமதியுண்டு. அதில் 8 முறை அவரது துணைவியோ, அவரது தோழரோ அந்த உறுப்பினரைப் பார்க்க தனியாக விமானத்தில் செல்ல அனுமதியுண்டு. இவ்வாறு விமானப் பயணத்தோடு மேலும் பல அலவுன்ஸ்களும் ராஜ்யசபா உறுப்பினருக்கு உண்டு. அதையெல்லாம் விட, உடனடியாக கைது செய்யப்பட முடியாது, வேறு எந்த வழக்கிலும் ராஜ்யசபா உறுப்பினரை சாட்சியாக சேர்த்துவிட முடியாது என்பது போன்ற சட்ட உரிமைகளும் உள்ளன.

அதேநேரம்... “தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பது தமிழக அரசின் மாநில கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து கொண்டது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நினைத்தால் தமிழக எம்பிக்களை கூட்டிப் பேச முடியும். ஒவ்வொரு துறை மத்திய அமைச்சரையும் எளிதில் சந்திக்க முடியும். ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சென்று அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை விட, ஒரு மாநில அரசின் டெல்லி பிரதிநிதியாக சென்று கொடுக்கும் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும், செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். இவ்வாறு கிட்டத்தட்ட டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் முகமாக சபரீசனை அமர்த்தலாமா என்ற ஆலோசனை இப்போது சூடுபிடித்து வருகிறது.

அண்மையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிகளாக திருவாரூர் அசோகன், தளவாய் சுந்தரம் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் காலத்தில் இது ஒரு அலங்காரப் பதவியாகவே இருந்திருக்கிறது. தமிழக முதல்வர்கள் டெல்லி வரும்போது வரவேற்பது மட்டுமே அவர்களுக்கான பணியாக கருதப்பட்டது. அவர்களுக்கு ஆட்சி மேலிடத்தால் சுதந்திரம் அளிக்கப்படவில்லை. ஆனால், சபரீசன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றால், இந்த பதவியின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியும். இதெல்லாம் இன்னும் விவாத அளவிலேயே இருக்கிறது, முடிவு என்னவோ சபரீசன் கையில்” என்கிறார்கள் சபரீசன் வட்டாரத்தில்.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

சனி 29 மே 2021