மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

ஆக்சிஜன் செறிவூட்டிகள்: அரசுக்கு உதவிய ஈஷா!

ஆக்சிஜன் செறிவூட்டிகள்: அரசுக்கு உதவிய ஈஷா!

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா யோகா மையம் சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்குவது, கொரோனாவால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.

கோவையில் நேற்று (மே 28) மாலை சுகாதாரத் துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா, டி.ஆர்.ஓ.ராமதுரை உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ .கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 500 பி.பி. இ.கிட்கள், 5,000 N95 முக கவசங்கள், 500 CPAP முக கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 29 மே 2021