மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

கொரோனா: சாப்பாட்டு ராமனுக்கு ஜாமீன்!

கொரோனா: சாப்பாட்டு ராமனுக்கு ஜாமீன்!

அதிக அளவிலான உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டு, யூடியூப் மூலம் பிரபலமானவர் சாப்பாட்டு ராமன். இவர் கொரோனாவுக்கு ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைத்ததால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்செழியன். சித்த மருத்துவத்தில் பிஎஸ்எம்எஸ் படித்துவிட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில், அய்யப்பன் என்ற பெயரில் கிளினிக் ஒன்றைச் சொந்த ஊரிலேயே நடத்தி வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கினார். அப்போது முதல் அவரது பெயர், ‘சாப்பாட்டு ராமன்’ என்றானது.

3 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் சாப்பாட்டு ராமனுக்கு கிடைத்தனர்.

கை நிறையச் சோற்றை உருட்டி, அதை சேலஞ்சாக சாப்பிட்டு வீடியோ பதிவிடும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். ’3 கிலோ மஷ்ரூம் பிரியாணி’, ‘4 கிலோ பஞ்சாபி ஸ்டைல் மட்டன்’, முழு கிடா விருந்து’, 9 ப்ளேட் சாப்பாடு & ஃபிஷ் கிரேவி’, ‘5 கிலோ மட்டன் பிரியாணி’ என அதிக அளவிலான உணவுகளைச் சாப்பிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.

இவ்வளவு உணவுகளை சாப்பிடும் அவர், அது ஜீரணமாவதற்கும் சில சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வார். அதற்கும் யூடியூப்பில் விளக்கம் கொடுத்து விற்பனை செய்து வந்தார். தனது சப்ஸ்கிரைபர்களுக்கு, ஜீரணமாவதற்கும், உடல் எடையை குறைக்கவும் சில டிப்ஸ் கொடுப்பார்.

இந்நிலையில் தான், ‘சாப்பாட்டு ராமன்’ தனது க்ளினிக் மூலம் ஆங்கில மருந்துகளை, உரிய அங்கீகாரம் இன்றி பரிந்துரைத்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் சென்றது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சித்தா க்ளினிக்கில் அதிரடியாக நேற்று (மே 27) சோதனை நடத்தினர். இதில் க்ளினிக்கில் இருந்து ஆங்கில மாத்திரைகளைப் பறிமுதல் செய்து க்ளினிக்குக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து சுகாதாரத் துறையினர் 'சாப்பாட்டு ராமன்’ மீது கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து நாம் கீழ்குப்பம் காவல்நிலையத்தில் விசாரித்ததில், “ ‘சாப்பாட்டு ராமன்’ உரிய அனுமதி இல்லாமல் ஆங்கில மருந்தை பரிந்துரை செய்ததால் அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினோம். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். கைதான பிறகு, கொரோனா மறு பரிசோதனை எடுத்து, முடிவு எதுவும் வரவில்லை. இதன் காரணமாக ஜாமின் பெற்று தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 28 மே 2021