மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

உங்கள் தொகுதியில் முதல்வர் : பயனாளிகளிடம் பேசிய முதல்வர்!

உங்கள் தொகுதியில் முதல்வர் : பயனாளிகளிடம் பேசிய முதல்வர்!

உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு, அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று(மே 28) முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

துறை ரீதியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, அதன் மீது எடுக்கப்பட்ட, எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, இத்துறையின் கீழ் பயனடைந்த தேனி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த பயனாளிகளுடன் தொலைபேசி மூலம் பேசினார். அவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விசாரித்த முதல்வர், கொரோனா தொற்று பரவாமல் இருக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 28 மே 2021