மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

எட்டு மாதத்துக்குப் பின் ஜிஎஸ்டி கவுன்சில்- என்னென்ன கோரிக்கைகள்!

எட்டு மாதத்துக்குப் பின் ஜிஎஸ்டி கவுன்சில்- என்னென்ன கோரிக்கைகள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் இன்று (மே 28) காலை 11 க்கு தொடங்கியிருக்கிறது.

எட்டு மாதங்களுக்குப் பின் கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் என்பது தேசிய முக்கியத்துவம் என்றால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பது மாநில முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

தமிழகம் சார்பில் இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பொதுவாகவே பல்வேறு மாநிலங்களும் கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க அல்லது ரத்து செய்ய வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா தொடர்பான தடுப்பூசி, மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார். இந்த கோரிக்கையை தமிழக நிதியமைச்சர் இன்று நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா தொடர்பான மருந்துகள் இறக்குமதிக்கு 5% ஜிஎஸ்டி வரியும், இந்தியாவெங்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய 12% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் நீக்குமாறு தமிழகம் கோரிக்கை வைக்கும் என்று தெரிகிறது.

இது தவிர தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்கும்படியும் கோரிக்கை வைக்கப்படும் என்றும் கோட்டை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 28 மே 2021