மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

இறப்பை குறைத்துக் காட்டுகிறார்கள் : எடப்பாடி பழனிசாமி

இறப்பை குறைத்துக் காட்டுகிறார்கள் : எடப்பாடி பழனிசாமி

கொரோனா இறப்பு விகிதத்தைக் குறைத்துக் காட்டுகிறார்கள் என்று தமிழக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி  குறித்தும் கேட்டறிந்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “சேலம் உருக்காலையில் ஒரு வாரமாகியும், அங்கு ஏற்படுத்தப்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆக்சிஜன் வசதியைச் செய்து கொடுத்தால் தான் மக்கள் உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேலம் மாவட்டம் முழுவதும், கோவிட் மையங்களில் 3800 படுக்கைகள் தான் உள்ளது. ஆனால் 11,500 படுக்கைகள் இருப்பதாக அரசு தெரிவிக்கின்றது.   கடந்த ஆட்சியில் 267 பரிசோதனை நிலையங்கள்  ஏற்படுத்தினேன். அதே பரிசோதனை நிலையங்கள் தான் தற்போதும் உள்ளது. இதனையும் அதிகரிக்க வேண்டும்.

இன்றைக்கு இறப்பு விகிதத்தைக் குறைத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். சுடுகாடுகளில் வரிசையாக உடல்கள் வைக்கப்படுவதைக் காண முடிகிறது. கொரோனா இறப்பைக் குறைத்துக் காட்டும்போது, மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்காது. சரியான புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு நிகழ்வுகள் மேற்கொள்ளும்போது, அங்கு ஏராளமானோர் கலந்து கொள்வதால் தொற்று பாதிப்பு அதிகமாகிறது. சேலம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், பல மணி நேரம் மயானங்களில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. மயானங்களில் தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும்,  “கிராமங்கள் வரை கொரோனா அதிகமாகப் பரவியுள்ளது.  இதற்குக் காரணம்,  தளர்வில்லா ஊரடங்கிற்காக, கடந்த சனிக்கிழமை மதியம் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விதிகளை தளர்த்தி போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததுதான்.  இதனால், 6 லட்சம் பேர் வரை நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு வந்துவிட்டனர்.

அவர்களுக்கு எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியிலிருந்தபோது, கிராமத்திற்குப் புதிதாக யார் வந்தாலும் சோதனை நடத்திய பிறகே அனுமதித்தோம். இதனால்தான் அப்போது கொரோனா கட்டுக்குள் இருந்தது.

முதல் அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.  அது தவறு, வல்லரசு நாடுகளில் கூட அதனைக் கட்டுப்படுத்தவில்லை. அதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததால் தான் கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் கொண்டு வரப்பட்டது” என்றார்.

பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வெள்ளி 28 மே 2021