மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

புதுச்சேரி: நமச்சிவாயத்தின் அடுத்த நிபந்தனை!

புதுச்சேரி: நமச்சிவாயத்தின் அடுத்த நிபந்தனை!

தமிழகத்துக்கும், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும், ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 2ஆம் தேதி ஒரே நாளில் முடிவுகள் வெளியானது. தொடர்ந்து மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன், 33அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

பொறுப்பேற்றது முதல் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் ஆய்வு, ஆலோசனை என மக்களை கொரோனாவிலிருந்து காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் புதுவையில் நிலைமை அப்படியில்லை. புதுவையில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. மே 27ஆம் தேதி நிலவரப்படி, ஒருநாள் பாதிப்பு 1,137ஆக உள்ளது. மொத்தம் 1,00,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை, 1,455 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.45 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, புதுவையில் ஆட்சி அமைப்பதில், முதல்வர் ரங்கசாமிக்கும் பாஜகவுக்கும் இடையே நடக்கும் அதிக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு நடைபெறும் போட்டியில் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

துணை முதல்வர் பதவி தந்தே ஆக வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. நமச்சிவாயம் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், அதற்கு ரங்கசாமி சற்றும் இடம் கொடுக்கவில்லை. இதனால் அடுத்தகட்ட நிபந்தனைக்கு நமச்சிவாயம் வந்திருக்கிறார்.

அதாவது உள்துறை, நிதி, சுகாதாரம், பொதுப்பணித் துறை என பாஜக அமைச்சர்களுக்குச் சரிபாதியாக முக்கியத் துறைகளைக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார்.

இதற்கும் முதல்வர் ரங்கசாமி, எதுவும் சொல்லாமல் அமைதி காத்துவருவதால், அமைச்சர்கள் பதவி ஏற்பு தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. கொரோனாவால் மக்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வெள்ளி 28 மே 2021